யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் (Photos)
யாழ்ப்பாணம் - புத்தூர் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் புத்தூர் கிழக்கு பகுதியில் நேற்று (30.12.2023) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
தொடர்ந்து, வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலில், வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு - வருட ஆரம்பத்திலேயே இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
