தென்னிலங்கைக்குள் இடப்பெயர்வை சந்தித்துள்ள மகிந்த! எல்லையில் காத்திருக்கும் மக்கள் - LIVE
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேறவுள்ளார்.
இன்று(11) பிற்பகல் தங்காலையில் உள்ள தனது சொந்த ஊரான மெதமுலனவுக்கு மகிந்த செல்லவுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு இன்று காலை பல வெளிநாட்டு தூதுவர்களை மகிந்த சந்திக்கவுள்ளார்.
மகிந்தவின் இடம்பெயர்வு
முன்னாள் ஜனாதிபதி இன்று மாலை 4.00 மணியளவில் தங்காலைக்கு செல்ல உள்ளார். மேலும் அவரை அங்கு வரவேற்க சிறப்பு நிகழ்வொன்று தங்காலை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பின்னர் மகிந்தவின் இடம்பெயர்வு ஏற்படுகிறது.
உத்தியோகபூர்வ இல்லம்
அதற்கமைய, மற்ற முன்னாள் ஜனாதிபதிகளும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்காமையினால் அவர் வழக்கம் போல் தனது தனிப்பட்ட இல்லத்திலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam