யாழ்ப்பாண உணவகமொன்றில் உணவருந்த சென்றவர்களிற்கு காத்திருந்த ஏமாற்றம்
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் உணவுக்குள் பிளாஸ்டிக் கட்டை இருந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் நேற்று (30.12.2023) இடம்பெற்றுள்ளது.
இரவு வேளையில் உணவருந்த சென்றவர்கள் குறித்த உணவகத்தில் கொள்வனவு செய்த உணவிலேயே இவ்வாறு பிளாஸ்டிக் கட்டை துண்டு கிடந்துள்ளதாக கூறப்படுகிறது.
உணவுகளின் தரம்
எனினும் இது தொடர்பில் உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பொறுப்பான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உணவகத்தின் செயலை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விரைந்து செயற்பட்டு உணவுகளின் சுகாதாரம் தரம் என்பவற்றில் அக்கறை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
