கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
2024 ஆம் ஆண்டில் கொழும்பை சுற்றி 10, 000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
11 வீட்டுத் திட்டங்களின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுத் திட்டம் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நிர்மாணப் பணிகள்
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக கிட்டத்தட்ட 6,500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவற்றில் ஆறு வீடமைப்புத் திட்டங்கள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், அதற்காக 552 மில்லியன் சீன யுவான் (22 பில்லியன் ரூபா) உதவித் தொகையாகப் பெறப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, 1996 வீடுகள் நிர்மாணிக்கப்படும் எனவும், எதிர்வரும் மார்ச் மாதம் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
இவ்வகையில் 2024 ஆம் ஆண்டில் கொழும்பை சுற்றி 10, 000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |