பெட்ரோலை கள்ளச் சந்தையில் விற்ற பெண் கைது
களுத்துறை அளுத்கமை பிரதேச கூட்டுறவு எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரின் மனைவி ஒரு போத்தல் பெட்ரோலை 800 ரூபாவுக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணிடம் இருந்து ஒரு தொகை பெட்ரோலும் கைப்பற்றப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது கணவர் கொண்டு வரும் பெட்ரோலை தாம் இவ்வாறு விற்பனை செய்து வருவதாக கைது செய்யப்பட்ட பெண், பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

ஒரு போத்தல் பெட்ரோலை 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்வது போல் ஒற்றர் ஒருவரை அனுப்பிய பொலிஸ் பெட்ரோலை கொள்வனவு செய்த பின்னர், வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் தொகையுடன் பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார தெரிவித்துள்ளார்.
கள்ளச் சந்தையில் விற்கப்படும் எரிபொருள்
இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், மக்கள் எரிபொருளை கோரி போராட்டங்களை நடத்தி வருவதுடன் எரிபொருளை பெற எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்து கிடக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில், எரிபொருளை கொள்வனவு செய்து அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பணிப்புரியும் ஊழியர்கள் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri