விசாரணைக்கு எடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனைக்கு எதிரான மனுக்கள்
அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு யோசனைக்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(26) ஐந்து பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான ஏ.எச்.எம்.டி. நவாஸ், சிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் மனு விசாரணைக்கு முன்னிலையாகியிருந்தனர்.
மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக குறைந்தபட்சம் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுதாரர்களில் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தினர் சோசலிச இளைஞர் சங்கத்தினர், இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் துமிந்த நாகமுவ ஆகியோர் அடங்குவர்.
சர்வஜன வாக்கெடுப்பு
ஜனவரி 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமெனில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற வாக்கெடுப்பு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பை அவசியம் என்று உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த சட்டமூலம் தற்போதைய வடிவில் நிறைவேற்றப்பட்டால், முப்படை, பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு நியாயமான சந்தேகம் இல்லாமல் கைது
செய்ய வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படும்
அத்துடன், இது அரசியலமைப்பு உத்தரவாதம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை
உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |