புதிய பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான வாய்மொழி வாதங்கள் இன்றுடன் நிறைவு!
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை எதிர்த்து அரசாங்கத்தால் நாடாளுமனத்தில் சமர்பிக்கப்பட்ட மனுக்கள் மீதான வாய்மொழி வாதங்கள் உயர் நீதிமன்றத்தில் இன்றுடன்(21.10.2026) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் ஏதேனும் எழுத்துப்பூர்வ வாதங்கள் இருப்பின், அவை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்த உச்ச நீதிமன்றத்தின் இரகசியக் கருத்து பின்னர் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri