பாம்பன் விசைப்படகு கடற்றொழிலாளர்களின் வலையில் சிக்கிய இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள்
இராமநாதபுரம்- பாம்பனில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து நேற்று (20.10.2026) 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற கடற்றொழிலாளர்களின் வலைகளில் இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் சிக்கியுள்ளன.
தங்கச்சிமடத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 கூரல் மீனும், மற்றொறுவர் படகில் 2 கூரல் மீன்கள் என மொத்தமாக ஏழு கூரல் மீன்கள் சிக்கியதுஏழு கூரல் மீனகளும் மொத்தமாக 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3500 வீதம், இந்திய மதிப்பில் 3 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த கூறல் மீனை உணவுக்காக பயன் படுத்துவதில்லை. கூறல் மீனின் வயிற்று பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (fish maws) நெட்டி காணப்படும். இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மது பானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவைகளை சுவையாகவும், கெட்டு போகாமல் இருக்க பயன்படுத்துகின்றனர்.
விலை உயர்ந்த சூப்
கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளை கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்க பயன்படுத்துவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாம்பன் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் பிடித்த ஏழு கூரல் மீன்களையும் 3 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையானதால் கடற்றொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri