ரஞ்சன் ராமநாயக்க குறித்து உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க போட்டியிடுவதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை எதிர்த்து, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மஹிந்த சேனாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடுங்காவல் சிறைத்தண்டனை
உயர்நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வினால், ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு அவர் தகுதியற்றவர் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் மனு அழைக்கப்படுவது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 2021 ஜனவரி 12ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவர் நிபந்தனையின்பேரில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |