பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்
கம்பஹா, அத்தனகல்ல பிரதேசத்தில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அலவல பிரதேசத்தை சேர்ந்த 6 வயதான முதலாம் தரத்தில் கல்வி கற்கும் தேஜான் தினுவர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் பொம்மைகள், மின் மோட்டார்கள், டோர்ச்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பழுதுபார்த்து சரிசெய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிர்சாதனப் பெட்டி
தாயும் தந்தையும் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் குளிர்சாதனப்பெட்டிக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தும் போது சிறுவர்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri