கடவுச்சீட்டு இன்றி விமானத்தில் பயணித்த நபர்: சர்ச்சை தொடர்பில் அதிகாரிகள் விசாரணை
கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி ரஷ்யர் ஒருவர் விமானத்தில் பயணித்த சம்பவமானது சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விமானத்தில் பயணித்த சம்பவம் தொடர்பிலேயே அதிகாரிகளால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
டென்மார்க்கில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மீறினார் என்பது தொடர்பில் எதுவும் நிலைவில் இல்லை என்றே குறித்த நபர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
வழக்கு பதிவு
இந்த நிலையில் அவர் மீது பெடரல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
46 வயதான குறித்த நபர் கடந்த நவம்பர் 4ஆம் திகதி கோபன்ஹேகனில் இருந்து ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் 931 விமானம் மூலம் பயணித்து சுமார் 8,600 km கடந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
தனது கடவுச்சீட்டை தான் பயணித்த விமானத்தில் விட்டுச் சென்றதாக அவர் முதலில் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
ஆனால் விசாரணையில் Ochigava பயணப்பட்டதாக தரவுகள் எதுவும் பதிவாகவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இரண்டாவது கட்ட விசாரணை
இதனையடுத்து, சட்டவிரோதமாக பயணம் செய்தவர் என்ற முறையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
எனினும் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். அவர் மீதான இரண்டாவது கட்ட விசாரணையானது டிசம்பர் 26ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ள அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமனால் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |