ரணிலுக்கு ஆபத்தாகுமா மார்ச் மாதம்! அநுரவின் முடிவுகளால் அச்சத்தில் பௌத்த துறவிகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதுமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28.01.2026) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவரை 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் பிப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..! 34 நிமிடங்கள் முன்
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri