சீன ஹெக்கர்களால் உளவு பார்க்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமரின் அலுவலகம! வெளியான புலனாய்வுத் தகவல்கள்
பிரித்தானிய பிரதமரின் அலுவலகமான 'டவுனிங் ஸ்ட்ரீட்' (Downing Street) அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சர்களின் தொலைபேசிகள் பல ஆண்டுகளாகச் சீன அரசுடன் தொடர்புடைய ஹெக்கர்களால் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு (ஹெக்) உளவு பார்க்கப்பட்டதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அரசின் ஆதரவு பெற்ற ஊடுருவல் (ஹெக்கிங்) குழுக்கள், பிரித்தானிய அரசாங்கத்தின் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் உரையாடல்களைப் பல ஆண்டுகளாகக் கண்காணித்து வந்ததாகப் பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரசின் ரகசியங்கள்
குறிப்பாக 2021 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் பொரிஸ் ஜோன்சன், லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரின் கீழ் பணியாற்றிய உதவியாளர்களின் தொலைபேசிகள் குறிவைக்கப்பட்டுள்ளன.

'சோல்ட் டைபூன்' (Salt Typhoon) என அழைக்கப்படும் இந்த உளவு நடவடிக்கை மூலம் பிரித்தானிய அரசின் ரகசியங்கள் திருடப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தச் சர்ச்சை ஒருபுறம் இருக்க, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் ஜனவரி 28 முதல் 31 வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
சீனாவுக்குப் பயணம்
கடந்த 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் பிரித்தானிய பிரதமர் இவராவார்.

"சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகச் சீனா வழங்கும் வணிக வாய்ப்புகளை நாம் புறக்கணிக்க முடியாது" என்று ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் நாட்டின் பாதுகாப்பிற்குச் சீனா அச்சுறுத்தலாக இருக்கும்போது, மறுபுறம் அவர்களுடன் வர்த்தக உறவை மேம்படுத்த பிரதமர் முயற்சிப்பது கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam