யாழில் இருந்து கொழும்பிற்கு பயணித்த அதிசொகுசு பேருந்து சாரதியின் மோசமான செயல்
கிளிநொச்சி ஏ9 வீதியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (27-01-2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் சிக்கியுள்ளார்.
சோதனை நடவடிக்கை
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் இரவு நேரத்தில் பேருந்துகள் மற்றும் வாகனங்களின் தரம் மற்றும் வாகன சாரதிகள் மீது சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இரவு 11 மணியளவில் மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக வாகனங்கள் சோதனையிடப்பட்டதுடன் வாகன சாரதிகளும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்றினை போதைப்பொருள் பாவித்து விட்டு செலுத்திச் சென்ற சாரதி கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

