தேங்காய் திருடிய குற்றத்திற்காக மோசமாக தாக்கப்பட்ட நபர்
தேங்காய் ஒன்றை திருடினார் எனக் கூறி, ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் புத்தளம் மாவட்டம் சிலாபம், மாரவில பொலிஸ் பிரிவின் நாத்தாண்டிய பிரதேசத்தில் நடந்துள்ளது.
தென்னந்தோட்டம் ஒன்றின் நிர்வாக அதிகாரிக்கு ஆதரவான சிலர், அந்த நபரை தாக்கியுள்ளனர்.
மிக மோசமான முறையில் தாக்குதல் நடத்திய நபர்கள், தேங்காயை திருடினார் எனக் கூறப்படும் நபரின் ஆடைகளை களைந்த வீதியில் ஓடவிட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள், குறித்த தென்னந்தோட்டத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
பில்லியன் கணக்கில் பணம் கொள்ளையிடப்படும் நாட்டில் தேங்காயை திருடிய குற்றத்திற்காக ஒருவரின் ஆடையை களைந்து மோசமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.