சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டும்: சுயாதீன கட்சிகள் கோரிக்கை
சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டுமென சுயாதீன கட்சிகளின் ஒன்றியம் கோரியுள்ளது.
சர்ச்சைக்குரிய சீன கப்பல் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
சுயாதீன கட்சிகள் கோரிக்கை
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கி வரும் அரசியல் கட்சிகளே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாகிஸ்தான் போர்க் கப்பல் ஒன்ற இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பலின் அமைவிடம்
| சர்ச்சைக்குரிய சீனக்கப்பல் தொடர்பில் வெளியான தகவல் |
இந்த நிலையில் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இன்னும் 650 கடல் மைல் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்று குறித்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்று பிற்பகல் நிலவரப்படி கப்பல் 650 கடல் மைல் தொலைவில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்தி..
சீன கப்பல் விவகாரம் - இலங்கையின் IMF செயல்முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம்
புவிசார் பதற்றத்தை தோற்றுவித்துள்ள சீன கப்பல்
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri