புவிசார் பதற்றத்தை தோற்றுவித்துள்ள சீன கப்பல்
எனினும் கடந்த ஒரு வாரமாக, 730 அடி நீளமுள்ள இந்த சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பல், அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு காரணமாகவும், இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் இழுபறியின் அடையாளமாகவும் உள்ளது என்றும் அமெரிக்காவின் வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
தற்போது கப்பலை எப்போது நிறுத்துவது என்பது குறித்து இலங்கை அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரை கோடிட்டு அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூலோபாயமான இடத்தில் காலூன்றும் கப்பல்
இந்த நிலையில் சீனாவின் இராணுவ கப்பல்களை ஹம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றாதுபோனால்,மக்கள் விடுதலை இராணுவம் முக்கியமான கப்பல் பாதைகள் மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு அருகில் மிகவும் மூலோபாயமான இடத்தில் காலூன்றிவிடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, அண்மைய ஆண்டுகளில், வோஷிங்டனும் புது டெல்லியும்,சீனாவை எதிர்க்கும் நோக்கில் இந்தியப் பெருங்கடலில் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன.
இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம், பழுதுபார்ப்பதற்காக அமெரிக்காவின் கடற்படை கப்பல் ஒன்றுக்கு சென்னை துறைமுகத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
இதுவே அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றை பழுதுபார்ப்பதற்காக இந்திய துறைமுகம்
ஒன்று அனுமதித்த முதன்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.