சர்ச்சைக்குரிய சீனக்கப்பல் தொடர்பில் வெளியான தகவல்
சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இன்னும் 650 கடல் மைல் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று குறித்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்று பிற்பகல் நிலவரப்படி கப்பல் 650 கடல் மைல் தொலைவில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு தினங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் நிலவரப்படி, கப்பல் சுமார் 650 கடல் மைல் தொலைவில் இருந்ததாகவும், கப்பல் தொடர்பில் வெளியுறவு அமைச்சு மற்றும் துறைமுக அதிகாரசபை ஆகியவை பணிபுரிந்து வருவதாகவும் அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன யுவான் வாங்-5 கப்பல் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கைக்கான சீன தூதுவரிடம் அரசாங்கம் கோரியுள்ளது.
மேலும், அம்பாந்தோட்டை துறைமுக அதிகார சபையினால் இன்று குறித்த கப்பல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
