தானிய வகைகளின் இறக்குமதிக்கு அனுமதி
தானிய வகைகளை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கால்நடை தீவன உற்பத்திக்காக 25 ஆயிரம் மெட்ரிக் டொன் சோளம் உள்ளிட்ட தானிய வகைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இறக்குமதிக்கு அனுமதி
குறித்த தானிய வகைகளின் இறக்குமதி தொடர்பாக விவசாய அமைச்சரினால் அமைச்சரவைக்கு யோசனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கமையவே சோளம் உள்ளிட்ட தானிய வகைகளை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு,அவற்றை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை அறிக்கை
இதேவேளை கால்நடை தீவன உற்பத்திக்காக வருடாந்தம் ஆறு இலட்சம் மெட்ரிக் டொன் சோளம் தேவைப்படுவதாகவும் அமைச்சரவையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த வருடத்திற்குரிய இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டொன் சோளத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தேசிய சோள விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.