வடக்கு மாகாண தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் அவசியம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Dinesh Gunawardena P. S. M. Charles
By Kajinthan Mar 07, 2024 09:40 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் தற்காலிக, பதிலீட்டு, சாதாரண மற்றும் தினக்கூலி அடிப்படையில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் நேற்று(07.03.2024) இடம்பெற்ற விசேட சந்திப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு மாகாண விவசாய அமைச்சில் பணியாற்றும் 67 பேருக்கும், உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள பிரிவுகளில் கடமையாற்றும் 321 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பெண்கள் இருவருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

இலங்கைப் பெண்கள் இருவருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

நிரந்தர நியமனம்

அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்கருதி சேவையில் இணைக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும், இவர்களின் அனுபவம் மற்றும் துறைசார்ந்த திறன், அறிவை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதனூடாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளை ஈடுகொடுக்க கூடியதாக அமையும் எனவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் அவசியம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Permanent Appointment Of Temporary Servants

மேலும், தற்காலிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள், நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாக தெரிவித்த ஆளுநர், அவர்களின் பெயர்பட்டியல் அடங்கிய கோரிக்கை கடிதத்தையும் பிரதமரிடம் சமர்பித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட சிற்றூழியர் நியமனங்கள் வடக்கு மாகாணத்தில் முழுமையாக நிரப்பப்படவில்லை எனவும் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

பிரதமர் உறுதி

இதனால் வடக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த வெற்றிடங்களை நிரப்பி, சிறந்த பொதுச் சேவையை வழங்குவதற்கு ஆவணம் செய்யுமாறும் ஆளுநர், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடிதத்தை பெற்றுக்கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, இந்த விடயம் தொடர்பில் விரைவில் சாதகமான பதிலை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

ஏடன் வளைகுடாவில் பதற்றம்: சரக்கு கப்பலை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏடன் வளைகுடாவில் பதற்றம்: சரக்கு கப்பலை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US