முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம்....! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கின்றனர் எனினும், அரசு இது தொடர்பில் கவனம் கொள்ளவில்லை என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த முன்பள்ளி நிர்வாகங்கள் சிறிதளவு ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது. சில ஆசிரியர்களுக்கு கல்வி திணைக்களம் 6000 ரூபாய் ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது.
அரசியல் பிரமுகர்
இவ்வாறான சூழ்நிலையில், குறித்த ஆசிரியர்கள் சிறப்பான கல்வி வழங்குவதிலும் தமது பொருளாதாரத்தை கொண்டு செல்வதிலும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியர்கள் நீண்ட காலமாக இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து வருகின்றனர்.
அவர்கள் தமது பிரச்சினையை ஒரு அணியாக அல்லது குழுவாக பலரிடத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் காலத்தில் அவர்களுக்கு தீர்வு வழங்குவதாக அரசியல் பிரமுகர்களினால் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் பேசுவார்கள்.
ஆனால் குறித்த தேர்தல்கள் இடம்பெற்று தேர்தல் காலங்கள் முடிந்த பிறகும் அவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே அரசாங்கம், அரசாங்கம் முன்பள்ளி ஆசிரியர்களின் விடையத்தில் கூடிய கவனம் எடுத்து நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 21 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
