இஸ்ரேல் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு....! ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவு
புதிய இணைப்பு
இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளார்.
எண்ணெய் ஏற்றுமதி உட்பட இஸ்ரேலுடனான வர்த்தகத்தை துண்டிக்குமாறு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் காரணமாக ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
காசா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இன்று (02.11.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர்.
நடவடிக்கைகள்
இதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பாலஸ்தீனத்திலுள்ள பிரதிநிதி அலுவலகமும் செய்து வருகின்றன.
இதேவேளை, காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.
அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பு முடிவு
தங்கள் வசம் உள்ள வெளிநாட்டு பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாஸ் அமைப்பின் ஊடக பேச்சாளர் அபு உபைடா வெளியிட்ட காணொளியில் எதிர்வரும் நாட்களில் பல வெளிநாட்டு பணயக் கைதிகளை விடுவிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டு பணய கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்ற ஹமாஸ் போராளிகள் அறிவிப்பைத் தொடர்ந்து, கடவுச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாட்டு மக்கள், எகிப்து நாட்டிற்கு ரபா வழியாக கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
பணயக் கைதி
இஸ்ரேலுக்குள் கடந்த 7 ஆம் திகதி புகுந்து தாக்குதலை நடத்திய ஹமாஸ் அமைப்பு வெளிநாட்டினர் உட்பட ஏராளமானோரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
சமீபத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை சேர்ந்த 4 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
இந்நிலையில் ,வெளிநாட்டு பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் போராளிகள் முடிவு செய்துள்ளது.