மேலதிக வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவிக்கு நேர்ந்த துயரம்
கண்டி - ஹதரலியத்த பிரசேத்தை சேர்ந்த மாணவி, பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹதரலியத்த டி. பி. இலங்கரத்ன தேசிய பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கண்டியில் மேலதிக வகுப்புக்கு சென்று மீண்டும் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.
தீவிர சிகிச்சை
இதன் போது, பேருந்திலிருந்து இறங்க முயன்ற வேளையில் அவர் கீழே விழுந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநரான பிரபாத் மேகசூரிய என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர் கலகெதர நீதவான் நுவான் குணசேகர முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹதரலியத்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவி அப்சரா தசநாயக்கவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam