கிழக்கில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் பலர் பங்கேற்பு
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், கல்வி அமைச்சின் செயலாளர் குகநாதன், மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2014ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள், 9 ஆண்டு காலத்துக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்களே இவ்வாறு ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளனர்.





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



