கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளை தாக்கிய பயணி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளை தாக்கிய பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கபூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவர், மது போதையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கண்டி, பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திணைக்கள அதிகாரிகள்
சந்தேக நபர் மது போதையில் இருந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இருவரை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான அதிகாரிகள், விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



