32 ஆண்டுகளுக்கு பிறகு என் கனவு பலித்தது! - பேரறிவாளனின் தாய் உருக்கம்
பேரறிவாளன் சுதந்திர மனிதராக நடமாட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு பலித்ததுவிட்டது என பேரறிவாளனின் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“உடல் ஆரோக்கியம் கருதி அவ்வப்போது பரோல் நீட்டித்து வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பிணை 32 ஆண்டுக் கால போராட்டம் ஆகும்.
சிறையில் பேரறிவாளனின் நன்னடத்தை, கல்வி, உடல்நிலை இதைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால நிவாரணமாகப் பிணை வழங்கியுள்ளனர். மேலும்,எனது மகன் பூரண சுதந்திர மனிதராக நடமாட வேண்டும் எனக் காத்திருந்தேன்.
எனது கனவு பலித்தது. மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக எனது வேதனையை வெளிப்படுத்திய ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் விடுதலை கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.” என தெரிவித்தார்.
இதேவேளை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தரப்பில் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரரான பேரறிவாளன் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
