பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் குழப்பநிலை.. இடைநிறுத்தப்பட்ட போட்டிகள்
மத்திய மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியின் போது, ஏற்பட்ட வன்முறை காரணமாக, போட்டி ஒன்று இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக ஹொக்கி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வித்யார்த்த கல்லூரி மற்றும் மாத்தளை புனித தோமஸ் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஹொக்கி இறுதிப் போட்டியே இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.
வீரர்கள் மீது தாக்குதல்
இதன்போது மாத்தளை புனித தோமஸ் அணியின் வீரர்கள் மற்றைய அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வித்தியார்த்த கல்லூரியின் மாணவர்கள் ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றதன் பின்னர், புனித தோமஸ் அணி வீரர்கள், எதிரணி வீரர்களை தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




