பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நடந்த சோகம்
பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட்டத்தின் போது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஓகஸ்ட் 14ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடுகிறது.
சுதந்திர தின கொண்டாட்டம்
அந்தவகையில் நேற்றையதினம்(14) பாகிஸ்தானியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய போது 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 8 வயது சிறுமி மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன் 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ட்ரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால்...இந்தியா மீது இரண்டாம் கட்ட வரி! மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
மூவர் பலி
சிறுமி அசிசாபாத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், கோரங்கி என்ற இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மீட்புப்படை அதிகாரிகள், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பொறுப்பற்ற இது அபாயகரமானது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.




