பேராதனை பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) கலைப்பீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டக்கற்கை பிரிவில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்த வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த சித்சாரதா சில்வா என்ற மானவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் ஞஹெதெனிய பிரதேசத்தில் வைத்து நாவலப்பிட்டி, கண்டி ஊடாக பயணித்த தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த மாணவன் காதில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ ( Hands free) மாட்டியிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |