எரிபொருள் விலையை குறைப்பதாக மக்களை ஏமாற்றிய அரசாங்கம்
இலங்கையில் எரிபொருள் பொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைந்திருந்தது.
எனினும் இது பணக்காரர்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக பேருந்து மற்றும் முச்சக்ரவண்டி சாரதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எரிபொருட்களின் விலைகள்
முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மத்தியதர குடும்பங்கள் பயன்பாடுத்தும் கார்களுக்கான ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை
எனினும் பணக்காரர்கள் பயன்படுத்தும் வகையில் ஒக்டென் 95 ரக பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சாரதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மாதம் முழுவதும் இவ்வாறான நிலையே காணப்படும். இதன் பலன்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது. முச்சக்கர வண்டி கட்டணமோ அல்லது பேருந்து கட்டணமோ குறைக்கப்பட மாட்டாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.