பாதுகாப்பற்ற போக்குவரத்தை மேற்கொள்ளும் மக்கள்
அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்தன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு காணப்பட்டது.
இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதனை அடுத்து தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் சிரமம்
இந்தநிலையில், தற்பொழுது கிளிநொச்சி யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பொக்கணை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்பொக்கணை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.
இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர்.