நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி! கிராமத்துக்குச் செல்லும் நாடாளுமன்றம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி உள்ளதால் நாடாளுமன்றத்தை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவுள்ளார்.
மக்களின் காலடிக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது மற்றும் அவர்களின் யோசனைகளை உள்வாங்கிச் செயற்படுத்துவதுமே இதன் நோக்கம் ஆகும்.
வேலைத்திட்டம் வரையும் பொறுப்பு
இதற்கான வேலைத்திட்டத்தை வரையும் பொறுப்பை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் ஜனாதிபதி கையளித்துள்ளார்.
எதிர்வரும் சித்திரைப் புதுவருடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கல்விமான்களையும்
ஒன்றிணைத்துக் களமிறக்குவதற்காக வேலைத்திட்டம் ஒன்றை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
