மன்னாரில் உப்பினை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடிப்பு
நாட்டில் உப்பிற்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகிய செய்தியைத் தொடர்ந்து மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் கறி உப்பினை கொள்வனவு செய்ய மக்கள் திரண்டு வருவதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளது.
எனினும் மக்களுக்குத் தேவையான உப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் தீப்பிடித்த கப்பலினால் கடலில் இரசாயன பொருட்கள் கலந்துள்ளமையினால் நாட்டில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படலாம் என சமூக ஊடங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பு பக்கற்றுக்களை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்ததோடு, மக்கள் தமக்கு தேவையான உப்பு பக்கற்றுக்களையும் கொள்வனவு செய்துள்ளனர்.
எனினும் மன்னார் மாவட்ட மக்களுக்குத் தேவையான உப்பு போதிய அளவு உள்ளதாகவும்,
மக்கள் இவ்வாறு முந்தியடித்துக் கொண்டு உப்பினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை
இல்லை எனவும், தற்போது அதிக அளவு உப்பு கையிருப்பில் உள்ளதோடு, பெறும் போக
உப்பு உற்பத்தியும் தற்போது இடம்பெற்று வருவதாக மன்னாரில் உள்ள மாந்தை உப்பு
உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan