கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்கள்
முல்லைத்தீவு- கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(24) இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இடம்பெற்றது.
மாற்றுக்காணிகளை தாம் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது எனவும் தாம் அப்படி எந்த மாற்றுக் காணிகளையும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
வட மாகாண ஆளுநர் நேரில் வருகை தந்து மக்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதோடு, வாழ்விடப் பிரச்சினைக்கு உடனடியான சாதகமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேப்பாபுலவு பூர்வீக மக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

171 ஏக்கர் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தின் 59 ஆவது காலால் படைப்பிரிவினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே எமது காணிகளை விடுவிக்க கோரி இன்றிலிருந்து தொடர் போராட்டமாக இந்தப் போராட்டத்தினை தாம் முன்னெடுக்க போவதாக மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதத்தில தொடர்ந்து இன்றுமுதல் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
9 மாத குழந்தையை கட்டி வைத்து அடித்த நபர்.. அரசில் உயர் பதவியில் உள்ளவர்களின் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்



