9 மாத குழந்தையை கட்டி வைத்து அடித்த நபர்.. அரசில் உயர் பதவியில் உள்ளவர்களின் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Child Abuse Crime
By Sajithra Jun 24, 2026 07:22 AM GMT
Report

ஒன்பது மாதக் குழந்தையின் கைகள், கால்கள் மற்றும் வயிற்றை நாற்காலியில் கட்டி, குடையின் கைப்பிடியாலும் கைகளாலும் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதிபதி லஹிரு சில்வா ஜூலை 3ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார், பேட்டை, பெஸ்டியன் மாவத்தையை சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொடூர கொலை! தூணுடன் கை - கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொடூர கொலை! தூணுடன் கை - கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்

நீதிமன்றில் முன்னிலை.. 

நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்தபோது, ​​சிறுமியை நாற்காலியில் கட்டிப்போட்டு, இரும்புக் கம்பி மற்றும் கையால் கடுமையாகத் துன்புறுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

9 மாத குழந்தையை கட்டி வைத்து அடித்த நபர்.. அரசில் உயர் பதவியில் உள்ளவர்களின் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Man Arrested Tying Nine Month Baby Chair Beating

ஜூன் 21 ஆம் திகதி காலை சுமார் 7.30 மணியளவில், குழந்தை கொடூரமாகத் தாக்கப்படுவதைக் கண்ட ஒருவர், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளது. இந்தச் சிறுமி இதற்கு முன்னரும் இரவில் தாக்கப்பட்டிருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாரியபொலவைச் சேர்ந்த 23 வயதான அப்பெண்ணின் தாய், அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பெற்றோரின் மகள் என பொலிஸாரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான வழக்கு தொடர்பில் வெளியான தகவல்..

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான வழக்கு தொடர்பில் வெளியான தகவல்..

அரசாங்கத்தில் உயர் பதவி..

அவர் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்து, பத்தும் அனுருத்த என்ற வேலையில்லாதவரை மணந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகு, வேலை தேடும் நோக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு அக்குழந்தையுடன் கொழும்புக்கு சென்றுள்ளார். 

9 மாத குழந்தையை கட்டி வைத்து அடித்த நபர்.. அரசில் உயர் பதவியில் உள்ளவர்களின் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Man Arrested Tying Nine Month Baby Chair Beating

அங்கு, குழந்தையின் தந்தை, தாயையும் குழந்தையையும் இந்த சந்தேக நபரின் பொறுப்பில் விட்டுவிட்டு வேலை தேடிச் சென்றுள்ளார். மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியும் அவர் திரும்பவில்லை.

இந்நிலையிலேயே, தாக்குதலில் காயமடைந்த குழந்தை தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சந்தேக நபரை மேலும் காவலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை சிறுவர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி, அவரை நன்னடத்தையின் கீழ் வைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையின் போது சந்தேக நபருக்காக எந்த சட்டத்தரணியும் முன்னிலையாகவில்லை. முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதித்துறை நடுவர், சந்தேக நபரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US