காணாமல்போயுள்ள 19 வயது யுவதி! கண்டுபிடிக்க பொதுமக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்
பதுளை - ஹாலி எல பகுதியில் காணாமல்போயுள்ள 19 வயது யுவதியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர்.
குறித்த யுவதி காணாமல்போயுள்ளதாக தாயாரால் அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் மார்ச் 6ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விபரம்
இதற்கமைய, அவரை கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்கள் உதவுமாறும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
• பெயர்: ரத்நாயக்க முதியன்செலகே கவிந்தியா பவானி
• வயது: 19
• தேசிய அடையாள அட்டை எண்: 200750204474

• முகவரி: ஹெல மொரதொட்ட, ஹாலி எல காணாமல்போன யுவதி, சுமார் 5 அடி 06 அங்குல உயரமும், மெலிவான பெண் என்றும், அவரது கூந்தல் நீளமாக வளர்ந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அட்டம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியை - 071 - 8591528 அல்லது அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தை 055 - 2294965 தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.