வவுனியாவில் புகையிரத பாதையினை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
வவுனியாவில் புகையிரத பாதையினை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் புகையிரத பாதை அமைக்கும் செயற்பாடு இன்றைய தினம் (15.05.2023) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா - தோணிக்கல் வீதியிலிருந்து இருந்து ஏ9 வீதிக்கு செல்வதற்காக ஆலடி பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையினை கடந்த பல வருடங்களாக சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வடக்கிற்கான புகையிரத பாதையினை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புகையிரத பாதை அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு
குறித்த புகையிரத கடவை ஊடாக செல்வதற்கு தடையேற்படுத்தும் முகமாக புகையிரத பாதையினை அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இப்போராட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்,
கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என 100க்கும்
மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.












தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
