நாடளாவிய ரீதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் கைது(Video)
குமார் என்றழைக்கப்படும் கொள்ளையர் கொழும்பு, ராஜகிரிய பகுதியில் பதுங்கியிருந்த போது ஹட்டன் பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
ஹட்டன் - செனன் பகுதியில் உள்ள தோட்ட அதிகாரியொருவரின் வீட்டில் அண்மையில்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசி கொழும்பில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அந்நபரிடம் சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று இருந்துள்ளது.
அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போதே சந்தேக நபர் இராஜகிரிய பகுதியில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பல வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளையடித்து வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதானவரிடமிருந்து தங்கை நகை, தொலைபேசி உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் சைக்கிள் திருட்டு
யாழில் மூன்று இடங்களில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் ஊர்காவற்துறை நாராந்தனை பகுதியில், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம், யாழ். போதனா வைத்தியசாலை, குருநகர் சின்னகடை சந்தை ஆகிய பகுதிகளில் சைக்கிள்களை திருடிய இருவர் நாராந்தனை பகுதியில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
37 ,38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று சைக்கிள்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பான பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சைக்கிள்களில் ஒரு சைக்கிளுக்கு
மாத்திரம் சைக்கிள் தொலைத்தவர்களால் முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாகவும் ஏனைய
சைக்கிளுக்கு முறைப்பாடு இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக செய்தி-கஜிந்தன்,தீபன்



