17 ஆண்டுகளாக வீடின்றித் தவிக்கும் கிளிநொச்சி மக்கள் - அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 17 ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வந்த மக்களுக்கு டித்வா வீட்டுத்திட்டத்தில் கூட வீடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 17 ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் சில வாழ்ந்து வருகிறார்கள், இவர்களுக்கு டித்வா வீட்டுத்திட்டத்தில் கூட வாய்ப்பு அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்றும், தற்போது, ஆரம்பித்துள்ள பருவ மழையிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற்ற ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில், ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் ஊடாக நிரந்தர வீடுகளைப் பெற்று முழுமைப்படுத்தியவர்களுக்கும், டித்வா பாதிப்புக்களை எதிர்கொள்ளாதவர்கள் நிரந்தர வீடுகளில் வசித்தவர்கள் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு சில அதிகாரிகளின் இவ்வாறான முறைகேடுகளால் அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்காலிக வீடுகளில் வாழ்வோரும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
17 வருடங்களாக கிடைக்காத வீட்டுத்திட்டம்
கடந்த 2010ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்தில் இருந்து இன்றுவரை வீட்டுத் திட்டங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத பாதிக்கப்பட்ட அதிகளவான குடும்பங்கள் சுமார் 17 ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் சொல்லனாத் துன்பங்களை எதிர்கொண்டும், கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டும் டித்வா வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஆரம்பித்துள்ள பருவ மழையிலும் பெரும் சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - பரந்தன் கோரக்கன் கட்டு புளியம்பொக்கணை ஆனைவிழுந்தான் மற்றும் ஆனந்தபுரம் கிராம அலுவலர் பிரிவுகளில் இதுவரை நிரந்தர வீட்டு திட்டங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத பெருமளவான குடும்பங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இவர்களுக்கான வீட்டுத்திட்டங்களை வழங்காது குறித்த பகுதியில் ஏற்கனவே நிரந்தர வீட்டு திட்டங்களை பெற்றுக் கொண்டு அதனை முழுமைப்படுத்தி, அதில் குடியிருந்து வரும் குடும்பங்கள் தனிநபர்கள் முதியோர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு முறைகேடான விதத்திலே வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sudaron அவரால் எழுதப்பட்டு, 26 October, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri