மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள இறத்தோட்டை பிரதேச மக்கள்
சீரற்ற காலநிலை காரணமாக இறத்தோட்டை பிரதேச செயலத்திற்குட்பட்ட மிட்லண்ட்ஸ் இறப்பர்மலைத்தோட்டப் பிரதேச மக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவு அபாயம், நிலவெடிப்பு காரணமாக அங்கு குடியிருப்புக்களில் வசிக்கும் 38 குடும்பங்களைச் சேர்ந்த, 150 பேரை இடம்பெயர்ந்து செல்லுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்குடியிருப்புக்களில் வாழும் மக்கள் தற்காலிகமாக சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் மற்றும் அவர்களின் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக உடனடியாக அம்மக்களை அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றியமையால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள், என அனைவரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்கள் போதிய அடிப்படை வசதிகளின்றி தங்கிவருகின்ற நிலையில், 2012ஆம் அனர்த்தத்திற்கு உள்ளானதையடுத்து வீட்டுத்திட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதையடுத்து, சில குடும்பங்களுக்கான வீடுகள் மாத்திரமே வழங்கப்பட்டதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் எமது ஊடகப்பிரிவு களத்திற்கு சென்று ஆராய்ந்தபோது அம்மக்களின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
