திருகோணமலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்க அதிபரின் தகவல்

Trincomalee Floods In Sri Lanka
By Kiyas Shafe Nov 29, 2025 04:13 AM GMT
Report

​கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 25 தொடக்கம் 28 ஆம் திகதி காலை 8 மணி வரையுமான காலப்பகுதிக்குள் பிரிவுகளில் 3844 குடும்பங்களைச் சேர்ந்த, 11350 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. H. G. M. ஹேமந்தகுமார தெரிவித்துள்ளார். ​

இயற்கையின் கோரப்பிடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை - தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து

இயற்கையின் கோரப்பிடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை - தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் 

அதிக பாதிப்புக்குள்ளான பிரதேசங்கள், 

கிண்ணியா: 1600 குடும்பங்கள் – 3800 பேர்

குச்சவெளி : 870 குடும்பங்கள்- 2880 பேர் ​

மூதூர்: 750 குடும்பங்கள் – 2485

பேர் ​தம்பலாகமம்: 188 குடும்பங்கள் – 561 பேர்

கந்தளாய் : 151 குடும்பங்கள் - 630

பேர் ​சேருவில: 105 குடும்பங்கள் – 401

பேர் ​பதவிசிறிபுர: 40 குடும்பங்கள் – 123 பேர் ​

திருகோணமலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்க அதிபரின் தகவல் | People Affected By Floods In Trincomalee

பட்டணமும் சூழலும்: 85 குடும்பங்கள் – 299 பேர் ​

மொரவெவ: 34 குடும்பங்கள் – 99 பேர் ​

கோமரங்கடவெல: 5 குடும்பங்கள் – 22 பேர் ​

வெருகல்: 15 குடும்பங்கள் – 40 பேர் இவர்களில், 3515 குடும்பங்களை சேர்ந்த 9683 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ​

மேலும் இடை தங்கல் முகாம்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் தங்கியுள்ளனர். ​தம்பலாகமம் பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேர் ஆதி கோணேஸ்வரா வித்தியாலயத்திலும், கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 515 பேர் பாரதிபுரம் வித்யாலயத்திலும், 95 பேர் அல் ரவுல்லா வித்தியாலயத்திலும், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கமாஸ் நகர் முன்பள்ளியிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர். ​கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக மாவட்டத்தில் மொத்தமாக 95 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணங்களை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதோடு, மக்களின் பாதுகாப்பு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

திருகோணமலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்க அதிபரின் தகவல் | People Affected By Floods In Trincomalee

பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ​முக்கிய எச்சரிக்கைகள் மற்றும் பொதுச் சேதங்கள் - ​மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், ​ நீர் வடிந்து ஓடக்கூடிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ​

மாவட்டத்தில் வீதிகள், கடற்கரைப் பூங்காக்கள், பாலங்கள், கால்வாய்கள் போன்ற பொது உட்கட்டமைப்புகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார். ​கடற்கரை ஓரமாக வசிப்பவர்கள் அவதானமாக இருப்பதோடு, தங்களின் பாதுகாப்புக்காக இரவு நேரங்களில் உறவினர்களின் வீடுகளில் தங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கந்தளாய் வான் கதவு திறக்கப்படும் அபாயம் இருப்பதனால், கிண்ணியா கந்தளாய், தம்பலகாமம் ஆகிய பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார். ​

அரசாங்கத்தின் நிவாரண மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் W. H. G. M. ஹேமந்தகுமார தெரிவித்தார்.

பெருக்கெடுத்த களனி கங்கை! ஹங்வெல்ல முற்றுமுழுதாக வெள்ளத்தில்

பெருக்கெடுத்த களனி கங்கை! ஹங்வெல்ல முற்றுமுழுதாக வெள்ளத்தில்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US