திடீர் பணக்காரர்களின் பட்டியல் தரவா..! பொலிஸாரை விமர்சித்த பவானந்தராஜா எம்.பி
வலி. மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா, வட்டுக்கோட்டை பொலிஸாரை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று(30.01.2026) இடம்பெற்ற வலி. மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்கள் எப்படி திடீர் பணக்காரர்கள் ஆனார்கள், பொலிஸார் எவ்வாறு அவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றனர் என மக்கள் காணொளி ஆதாரத்துடன் எமக்கு தந்துள்ளார்கள். திடீரென பணக்காரர்களுக்கு எதிராக நாங்கள் திடீர் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கின்றோம்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவிலும் திடீர் பணக்காரர்கள் ஆகியுள்ளார்கள் என எமக்கும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அவ்வாறானவர்கள் குறித்தான தகவல்களை மேலும் எங்களுக்கு வழங்குங்கள். எங்களுக்கு கிடைத்த தகவல்களை நாங்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
பொலிஸாருக்கு முகவர்கள் இருக்கின்றனர். நாங்கள் அது குறித்து அவதானித்துக்கொண்டு தான் இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சிதம்பரமோகன் கருத்து தெரிவிக்கையில்,
எங்கு எங்கு குற்றவாளிகள் இருக்கின்றார்களோ அவ்வளவு பேரும் பொலிஸாருக்கு நண்பன். அவ்வாறு தொடர்புகளை பேணுபவர்கள் தான் நிலைய பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருக்கின்றனர்.
இந்த பொலிஸாரை கதிர்காம பக்கம் இடமாற்றம் செய்து விட்டால் அங்கு போய் சிங்களவர்களுக்கு சேவை செய்வார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரஜாசக்தி நியமனம்
இதேவேளை, சுழிபுரம் - காட்டுப்புலத்தில் ஏற்கனவே பிரஜாசக்தி அமைப்புக்கு மக்கள் தெரிவு செய்தர்களை நீக்கிவிட்டு தேசிய மக்கள் சக்தியினர் புதிய ஒருவரை தெரிவு செய்ததாக சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறு மாற்றம் செய்யுமாறு நீங்களே கூறியதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எங்களது பிரச்சினைகளை கூறினால் தீர்ப்பதாக தான் ஆரம்பத்தில் கூறினீர்கள்.

அதனால் தான் இங்கே கூறுகின்றோம். காட்டுப் புலத்தில் மூன்று பேர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களை நீக்கி விட்டு புதிதாக மூவரை தெரிவு செய்துள்ளீர்கள்.
மக்கள் பிரச்சனைகளும், கிராமத்தில் உள்ள பிரச்சனைகளும் தெரியாதவர்களை நியமித்துள்ளீர்கள். இவ்வாறு இருக்கையில் அவர்கள் எவ்வாறு மக்களின் பிரச்சனைகளை உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்? இதற்கான தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஒருங்கிணைப்பு குழு தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
இது நாடளாவிய ரீதியில் உள்ள பிரச்சினை. இதனை ஒரு கடிதம் மூலமாக எமக்கு தெரியப்படுத்துங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம்.
இது ஜனாதிபதியால் கொண்டுவரப்பட்ட நடவடிக்கை. எனவே மக்களிடம் இருந்து முன்வைக்கப்படுகின்ற குறைபாடுகளை அடுத்து வரவிருக்கின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைத்து சரியான நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam