சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!
2016ஆம் ஆண்டு கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(20.01.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேல்நீதிமன்ற நீதியரசர் ரஷ்மி சிங்கப்புலி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ட்ரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்திய ஸ்டார்மரின் முடிவு.. முக்கிய அமெரிக்க இராணுவத்தளம் ஆபத்தில்!
வழக்கு ஒத்திவைப்பு
இதன்போது, வழக்கின் சாட்சிகள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, மேலதிக சாட்சி விசாரணைகள் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி ராஜகிரிய பகுதியில் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி ஏற்படுத்திய விபத்தை மறைத்தமை மற்றும் சாட்சியங்களை அழித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி திலும் துசித குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.