ட்ரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்திய ஸ்டார்மரின் முடிவு.. முக்கிய அமெரிக்க இராணுவத்தளம் ஆபத்தில்!
அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவினை மொரீஷியஸுக்கு ஒப்படைக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளமை முட்டாள்தனமானது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் குறிப்பிடுகையில், “எங்கள் புத்திசாலி நேட்டோவின் கூட்டாளியான பிரித்தானியா, மிகவும் முக்கியமான அமெரிக்க இராணுவத் தளம் உள்ள டியாகோ கார்சியா தீவினை எந்தவித காரணமும் இல்லாமல் மொரீஷியஸுக்கு கையளிக்க திட்டமிட்டுள்ளது.
முட்டாள்தனமான முடிவு
சீனா மற்றும் ரஷ்யா இந்த முழுமையான பலவீனச் செயலை கவனித்திருப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இவை பலத்தையே மதிக்கும் உலக சக்திகளாகும்.

அதனால் தான், என் தலைமையில் அமெரிக்கா ஒரு வருடத்திற்குப் பிறகும் இதுவரை இல்லாத அளவிற்கு மரியாதையைப் பெற்றுள்ளது.
( @realDonaldTrump - Truth Social Post )
— Fan Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) January 20, 2026
( Donald J. Trump - Jan 20 2026, 1:38 AM ET )
Shockingly, our “brilliant” NATO Ally, the United Kingdom, is currently planning to give away the Island of Diego Garcia, the site of a vital U.S. Military Base, to Mauritius, and to do so FOR… pic.twitter.com/kw2q5mvTKP
பிரித்தானியா மிக முக்கியமான நிலப்பரப்பை கையளிப்பது மிகப் பெரிய முட்டாள்தனம், அதேநேரம், இது கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டியது தேசிய பாதுகாப்பு காரணங்களில் ஒன்று.
டென்மார்க் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளர்கள் சரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan