ஜெரோம் பெர்னாண்டோவிற்கு மன்னிப்பு வழங்க முடியாது! ஹேகொட விபஸ்ஸி தேரர்
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு மன்னிப்பு வழங்க முடியாது என ரத்மலான தர்ம ஆய்வு மையத்தின் பணிப்பாளர் ஹேகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஜெரோம் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரது பெற்றோர் கோடி முறை மன்னிப்பு கோரினாலும் இந்தப் பிரச்சினைக்கு சட்ட ரீதியான தீர்வு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அனுதாபத்தை பெற்றுக் கொள்ள முயற்சி
ஜெரோம் பெர்னாண்டோ தவறுதலாக இந்த குற்றச் செயலை இழைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது பெற்றோர் நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொள்ளவே இவ்வாறு முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தை இழிவுப்படுத்துவோருக்கு மன்னிப்பு வழங்கப்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan