வெளிநாட்டு இடம்பெயர்வு தீவிரம்! ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

Sri Lanka Sri Lankan Peoples Passport
By Rakesh Aug 05, 2022 06:36 AM GMT
Report

இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதி

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கையில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 192 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டன.

அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுவோருக்கான முக்கிய அறிவித்தல் 

அந்தவகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் கடவுச்சீட்டு வழங்கல் 33 வீதத்தால் அதிகரித்து 5 இலட்சத்து 90 ஆயிரத்து 260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு இடம்பெயர்வு தீவிரம்! ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் | Passport Distribution In Srilanka

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்

இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்காக மொத்தம் ஒரு இலட்சத்து ஆயிரத்து 777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

அதில் 98 ஆயிரத்து 124 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டுக்களை வழங்க முடிந்துள்ளது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.

திணைக்கள வரலாற்றின்படி, அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுக்கள் 2016 இல் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த ஆண்டில் 6 இலட்சத்து 58 ஆயிரத்து 725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு இடம்பெயர்வு தீவிரம்! ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் | Passport Distribution In Srilanka

எனவே, இந்த ஆண்டின் ஏழு மாதங்களில் 5 இலட்சத்து 90 ஆயிரத்து 260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமையால், 2016ஆம் வருடத்தின் சாதனை முறியடிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 701 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனர்.

எனினும், 2021ஆம் ஆண்டு முழுவதும் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காகச் சென்றுள்ளனர்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US