அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுவோருக்கான முக்கிய அறிவித்தல்
அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளது.
அதன்படி விசேட ஒரு நாள் சேவை தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை அனுப்ப வேண்டிய இலக்கம்
அந்தவகையில் அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுபவர்கள் வட்ஸ்அப் மூலம் தங்கள் ஆவணங்களை 070 6311711 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் விசேட ஒரு நாள் சேவைக்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு தொடர்பான அறிவிப்பு
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு |
இதேவேளை கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள இணையத்தின் மூலம் காலம் மற்றும் திகதியினை முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே இன்று முதல் சேவைகள் வழங்கப்படும் என திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அத்துடன் விண்ணப்பதாரிகள் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தமக்குரிய காலம் மற்றும் திகதியினை முன்பதிவு செய்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தேவைதானா தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2 நாட்கள் முன்

திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri
