குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டு வழங்கும் முறை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதிய அறிவிப்பை விடுத்துள்ளது.
இதன்படி, கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள இணையத்தின் மூலம் காலம் மற்றும் திகதியினை முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் நாளைய தினம் முதல் சேவைகள் வழங்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிகரிக்கும் விண்ணப்பங்கள்

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இதன்காரணமாக விண்ணப்பதாரிகள் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தமக்குரிய காலம் மற்றும் திகதியினை முன்பதிவு செய்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam