பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சந்தேகநபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணையில் உள்ள பிரபல பாடசாலையில் ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவர், நேற்று (7 ஆம் திகதி) காலை அலுபோமுல்ல பகுதியில் இருந்து பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி செல்லும் பேருந்தில் ஏறி மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துள்ளார்.

பொலிஸ் குழுக்கள் விசாரணை
இதன்போது ரைகம பகுதியில், கருப்பு கால்சட்டை மற்றும் சிவப்பு டி-சர்ட் அணிந்த ஒருவர் முன்பக்க கதவின் ஊடாக பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தின் பின்னர் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்துநோய்வாய்ப்பட்ட மாணவர் இதனையடுத்து பாடசாலைக்கு சென்றவுடன் கண் பார்வை மங்கலாகி, தலைச்சுற்றல் மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டமையினால் உடனடியாக வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri