அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் அதிகளவு அரசத்துறை பணியாளர்கள் இருப்பதாகவும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போதே வேதன மட்டம் குறைவாகவும் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சாக்ஸியன் தலைமையிலான குழுவினர் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், அரச ஊழியர்களின் எண்ணிக்கையை சரிசெய்து உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மின்சார செலவு உயர்வு
மேலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை அதிக மின்சாரச் செலவுகளை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் வலுசக்தி துறையில் உடனடியாக மறுசீரமைப்புகள் அவசியம் என்றும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




